ஈபிஎஸ் மீண்டும் முதலமைச்சராக வேண்டி மண் சோறு சாப்பிட்ட அதிமுகவினர்..! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று 69வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பூங்கொத்துகள் கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

மேலும் சேலம் மாவட்ட அதிமுக சார்பில்  69 கிலோ கேக் மற்றும் நிர்வாகிகள் கொண்டு வந்திருந்த 200 கிலோ கேக் வெட்டி தொண்டர்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். அதனை தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 125 ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சீருடை, புடவை மற்றும் இனிப்புகளை வழங்கினார். இதே போன்ற தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாம்பலத்தில் உள்ள கொல்கத்தா காளி பாரி கோயிலில் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதை முன்னாள் அமைச்சர் வளர்மதி தொடங்கி வைத்து மண் சோறு சாப்பிட்டு வழிபட்டார். அவருடன் அதிமுகவை சேர்ந்த 69 பெண்கள் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என வேண்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK members prays for EPS as Chief Minister again


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->