அமித்ஷா கொடுத்த பதிலடி!!! மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது...! - Seithipunal
Seithipunal


சென்னை, ராணிப்பேட்டையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56வது ஆண்டு விழாவில் பங்கேற்றார். அங்கு தொழில் பாதுகாப்பு படைத் தின அணிவகுப்பு செய்த மரியாதையை அமித்ஷா ஏற்றுக்கொண்டார்.

இந்த விழா நிகழ்ச்சியில் அமித் ஷா பேசியதாவது, " சி.ஐ.எஸ்.எப் யின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு மாநில மொழிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பிரதமர் மோடி வந்த பிறகு தான் சி.ஐ.எஸ்.எப் தேர்வு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுத முடிகிறது. மேலும் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை மாநில மொழிகளில் படிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தமிழுக்கும்,அதன் பாரம்பரியத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார்.

தமிழகத்தின் வளமான கலாச்சாரம், இந்திய பாரம்பரியத்தை வலுப்படுத்தி உள்ளது. எதிர்காலத்தில் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வல்லரசாக மாற்ற பிரதமர் மோடி சபதம் எடுத்துள்ளார். வரும் 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த இலக்குகளை அடைவதற்கு சி.ஐ. எஸ்.எஸ் பெரிதும் பங்களிக்கிறது" எனத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah response that central government gives importance to state languages


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->