அதிமுகவை தொடர்ந்து களத்தில் இறங்கிய அமமுக! வெளியான அறிவிப்பு!
AMMK Orathanadu Protest Announce 2023
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை kaழகம் இன்று விடுத்துள்ள அறிவிப்பில், "மக்கள் விரோத தி.மு.க அரசைக் கண்டித்து, தஞ்சை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் ஒரத்தநாட்டில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்தில், கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கண்டன உரையாற்றுகிறார்.
தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில்,
* பல்வேறு துறைகளில் நடைபெறும் ஊழல் முறைகேடு,
* கள்ளச்சாராயம், போதைப்பொருள்கள் மற்றும் போலி மதுபானங்களின் தாராளப்புழக்கம்,
* கேள்விக்குறியாகும் விவசாயிகளின் வாழ்வாதாரம்,
* கடமையைச் செய்யும் அரசு அதிகாரிகள் மீது தொடுக்கப்படும் மிரட்டல்கள் மற்றும் கொலை வெறித் தாக்குதல்கள்,
* பொதுமக்களை அச்சுறுத்தும் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள்
* தொடர்ந்து அரங்கேறிவரும் அமைச்சர்களின் அடாவடிப் பேச்சு,
* தலைதூக்கிவரும் தீண்டாமைக் கொடுமை,
* மக்களை வஞ்சிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு,
* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அனைத்து தரப்பினரையும் ஏமாற்றி வருதல்,
என அனைத்திலும் தோல்வியடைந்த விடியா விளம்பர அரசான தி.மு.க அரசைக் கண்டித்து, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக்கொள்கைகளைத் தொடர்ந்து நிலைநாட்டிட போராடி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் வருகிற 12.06.௨௦௨௩ திங்கள் கிழமை அன்று மாலை 4 மணியளவில் தஞ்சை தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்கள்.
தி.மு.க அரசைக் கண்டித்து நடைபெறும் இந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்திற்கு தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி, வார்டு/வட்டக் கழகம் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இதே மாதிரியான ஒரு போராட்டத்தை அதிமுக தமிழகம் முழுவதும் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
English Summary
AMMK Orathanadu Protest Announce 2023