அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் - மருத்துவமனை தகவல்.!! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் - மருத்துவமனை தகவல்.!!

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்ற போது, அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு ஈசிஜி இயல்பாக இல்லை என்றும், காலை 9 மணிக்குப் பிறகுதான் உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும் என்றும் மருத்துவமனை சார்பில் தகவல் வெளியானது. இதற்கிடையே அமைச்சர் சேகர் பாபு அவரை சந்திக்க சென்றார். 

அப்போது, அவர் செந்தில் பாலாஜி என்று அழைத்தபோது எந்தவிதமான பதிலும் அவரிடம் இருந்து வரவில்லை. இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் அமைச்சருடைய உடல்நிலை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் ''அமைசச்ர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மயக்க நிலையிலேயே உள்ளார். இதயத்துடிப்பு, உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இரண்டிலிருந்து மூன்று நாட்கள் வரை சிகிச்சை தேவைப்படுகிறது. அவருக்கு சீரான இதயத் துடிப்பு இல்லாத நிலையில் தேவைப்பட்டால் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

angio treatment to minister senthil balaji if needed hospital info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->