ஆதாரம் இருக்கே, ஆவணம் இருக்கே! திமுக அமைச்சருக்கு எதிராக அடித்து ஆடும் அமலாக்கத்துறை!
Anita RadhaKrushnan Case ED Case Thothukudi Court
திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குறிப்பு வழக்கில், தங்களையும் இணைக்க கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை, வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2001 - 2006 அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, திமுக தரப்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரை அடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் திமுகவில் இணைந்து, தற்போது அமைச்சராகவும் இருந்து வருகிறார். அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று, அமலாக்கத்துறை தரப்பில் நேற்று ஒரு மனு அளிக்கப்பட்ட நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் ராதா அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துகுப்பு வழக்கில் 80 சதவீதம் விசாரணை நிறைவடைந்துள்ளதால், இந்த வழக்கில் அமலாக்கதுறையை சேர்த்துக் கொள்ள முடியாது. அப்படி சேர்த்தால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும் என்ற வாதம் வைக்கப்பட்டது.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக எங்களுக்கு கிடைத்திருக்கும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும் இந்த நீதிமன்றத்தில் நாங்கள் சமர்ப்பிக்கிறோம். அதனை பார்த்துவிட்டு இந்த நீதிமன்றமே ஒரு முடிவை எடுக்கலாம் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2-ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
English Summary
Anita RadhaKrushnan Case ED Case Thothukudi Court