சென்னையை அதிரவைத்த மாணவி விவகாரம்: குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்! அதிர்ச்சி பின்னணி!
Anna University Student Abuse case Chennai Police Statement
சென்னை அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைது செய்யப்பட்ட ஞானசேகரன், குற்றம் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளதாக போலீசார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதில், "கிண்டி பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய ஆண் நண்பருடன் கல்லூரி வளாகத்தில் 23ம் தேதி இரவு சுமார் 8 மணியளவில் தனியாக ஒரு கட்டிடத்திற்கு பின்னால் பேசிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர்களை அச்சுறுத்தியதாகவும், அதே நபர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாகவும், கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது. காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POSH) ஒத்துழைப்புடன் விசாரணை செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. புலன்விசாரணையின் போது, அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (வயது 37) என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், இவர் நடைப்பாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
பெருநகர சென்னை காவல்துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint Security Review) மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே குற்றவாளி ஞானசேகரன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதனபடி,
சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஞானசேகரன் மீது ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
கோட்டூர்புரம் மண்டபம் தெருவில் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். தினமும் 7 மணிக்கு மேல் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் சென்று இதே வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து, மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது செல்போனில் பல வீடியோக்களும் உள்ளன.
கடந்த 2011 ஆம் ஆண்டு இதேபோல் அண்ணா பல்கலை கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Anna University Student Abuse case Chennai Police Statement