கோரமண்டல் ரெயில் விபத்து - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல்.!!
Annamalai condoles coromandel train accident deaths
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயிலுடன் மோதி நின்றது இன்று மாலை விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டது.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ஹவுராவில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த ரயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 179 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒதிஷா மாநிலத்தில் விபத்துக்குள்ளானதில், பலர் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.
விபத்து குறித்த விவரங்களுக்கு தென்னக ரயில்வே துறை அவசர கால உதவி தொலைபேசி எண்களான 044- 25330952, 044-25330953 & 044-25354771 இவற்றைத் தொடர்பு கொள்ளவும்" என இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
English Summary
Annamalai condoles coromandel train accident deaths