கிண்டியில் மீண்டும் ஒரு சம்பவம்!...கண்ணீருடன் பரிதவிக்கும் உறவினர்கள்! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில், சிகிக்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள் கண்ணீருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில்,  தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி, அங்கு பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜிக்கு கத்தி குத்து நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கத்தியால் குத்திய விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்த நிலையில், மருத்துவமனையை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கிண்டியில் உள்ள இதே மருத்துவமனையில் அங்கு விக்னேஷ் என்ற இளைஞர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால் அவரது உறவினர்கள் இளைஞருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும், இளைஞர் உயிரிழந்ததால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் மருத்துவமனை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Another incident in guindy relatives in tears


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->