பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை... சென்னை விரைகிறார் மாயாவதி.! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று பெரம்பலூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று சென்னை வர உள்ளார். 

மாயாவதியின் நம்பிக்கையாக திகழ்ந்த அவர் பள்ளி காலம் முதலில் அரசியலில் ஆர்வம் உடையவராக இருந்தார். சட்டம் படித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2000ம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்ட வந்தார். 

அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர் கடந்த 2006 ஆம் ஆண்டு டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் என்ற அமைப்பை உருவாக்கினார். சென்னை மாநகராட்சியின் 99 ஆவது வார்டில் 2006ம் ஆண்டு போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

2007ஆம் ஆண்டு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்த ஆம்ஸ்ட்ராங் 2011 ஆம் ஆண்டில் அம்பத்தூர் தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக 17 ஆண்டுகளாக இருந்து வந்த ஆம்ஸ்ட்ராங் ஏராளமான இளம் வழக்கறிஞர்களை உருவாக்கியுள்ளார். தலித் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்களை ஆம்ஸ்ட்ராங் தீர்க்கமாக முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Armstrong death Mayawati visit Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->