பட்டியலின மக்கள் சென்னையை நோக்கி படையெடுத்தால், தமிழ்நாடு தாங்காது - பூவை ஜகன் மூர்த்தி! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி, இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் சார்பாக நினைவேந்தல் பேரணி இன்று சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. 

மாலை 3 மணி அளவில் எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே தொடங்கிய இந்த நினைவேந்தல் பேரணி, ராஜரத்தினம் அரங்கம் அருகே நிறைவடைந்துள்ளது. பின்னர் ராஜரத்தினம் அரங்கில் அவருக்கு நினைவந்த நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 

இந்த பேரணிகள் திரைப்பட நடிகர்கள் மன்சூர் அலிகான், அட்டகத்தி படத்தின் நாயகன் தினேஷ், மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள்  பங்கேற்றனர்.

மேலும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜகன் மூர்த்தி கலந்து கொண்டு, இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிகள் பேசுகையில், "ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெறும் இந்த பேரணியில் ஒரு சில இளைஞர்கள் தான் பங்கேற்று உள்ளனர். 

ஆனால் பட்டியலின மக்கள் ஒன்றுபட்டு சென்னையை நோக்கி படையெடுத்தால், தமிழ்நாடு தாங்காது. ஆம்ஸ்ட்ராங்கை சதி திட்டம் தீட்டி கொலை செய்துள்ளனர். அதுவரை தமிழக உளவுத்துறை என்ன தான் செய்து கொண்டிருந்தது? என்று கேள்வி எழுப்பினார்.

முன்னதாக விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாளவன், மறைமுகமாக பா ரஞ்சத்தின் இந்த பேரணியில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்க கூடாது என்று அறிவுறுத்தி இருந்தது சமூக வலைத்தளங்களில் பரபரப்பு விவாதத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

armstrong muder case march for justice Pa Ranjith


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->