ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்! பெரம்பூரில் பதற்றமான சூழல்! கடைகள் அடைப்பு!
Armstrong murder Tension in Perambur Shops closed
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பெரம்பூர் பகுதியில் இயங்கி அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று மாலை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த பகுஜன் சமாஜ் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை அடையாளம் தெரியாத 6 பேருக்கு கொண்ட மர்மக்கும்பல் பட்டாகத்திகளால் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தநிலையில் சென்னை எழும்பூர் பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருவதால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பதட்டமான சூழல் காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுகிறது. பெரம்பூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
Armstrong murder Tension in Perambur Shops closed