உயர்நீதிமன்ற உத்தரவு படி அரசு பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயரை நீக்கவேண்டும்..மாணவர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!  - Seithipunal
Seithipunal

பள்ளிகளின் பெயரில் நன்கொடையாளர்களின் அல்லது தலைவர்களின் சாதியின் பெயர் இடம் பெறக் கூடாது நான்கு வாரங்களில் அனைத்தையும் நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் பரத்ராஜ் அவர்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று புதுச்சேரி அரசும் அரசு பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயரை நீக்கி உத்தரவிட வேண்டும் என புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாநன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாநன் கூறியதாவது:தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார் 

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற காரணத்திற்காக குழந்தைகளை பெற்றோரே கொலை செய்யும் நிலை நிலவுவதாலும், கைகளில் ஜாதி கயிறு கட்டிக் கொண்டு அரிவாளுடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து தாக்குதல்கள் நடத்துவதாலும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சங்கத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கி சங்க சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அணுக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.ஜாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக் கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று பதிவுத் துறை ஐஜிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சங்கங்களின் பெயரில் உள்ள ஜாதிப் பெயரை நீக்கி சட்ட திட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சமூக நீதி சிந்தனையுடனான தீர்ப்பை ஏற்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் பெயர் பின்னால் உள்ள சாதி பெயரை நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சென்னை உயர் நீதிமன்ற நீதி அரசர் பரத்ராஜ் அறிவித்துள்ள இத்தீர்ப்பை ஏற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் புதுச்சேரி அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம் என அரசை எச்சரிக்கை செய்கிறோம் நன்கொடையாளர்களின் அல்லது தலைவர்களின் சாதியின் பெயர் இடம் பெறக் கூடாது மூன்று வாரங்களில் அனைத்தையும் நீக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசர் பரத சக்கரவர்த்தி அவர்கள் வழங்கியுள்ள தீர்ப்பை ஏற்று புதுச்சேரி அரசும் அரசு பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதி பெயரை நீக்கி உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிறுவிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும் பள்ளிகளின் பெயர்களில் உள்ள சாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு  உத்தரவிட்டிருந்தார்.

கல்வி நிறுவனங்களின் பெயர்களில் இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்களில் நீக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேறு ஜாதியில் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற காரணத்திற்காக குழந்தைகளை பெற்றோரே கொலை செய்யும் நிலை நிலவுவதாலும், கைகளில் ஜாதி கயிறு கட்டிக் கொண்டு அரிவாளுடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வந்து தாக்குதல்கள் நடத்துவதாலும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, சங்கத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கி சங்க சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அணுக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.ஜாதிகளின் பெயரில் சங்கங்கள் பதிவு செய்யக் கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று பதிவுத் துறை ஐஜிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சங்கங்களின் பெயரில் உள்ள ஜாதிப் பெயரை நீக்கி சட்ட திட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க சமூக நீதி சிந்தனையுடனான தீர்ப்பை தமிழக அரசுக்கான உத்தரவாக பார்காமல் தீர்ப்பை ஏற்று புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் பெயர் பின்னால் உள்ள சாதி பெயரை நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என 
புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு நிறுவனர் சீ.சு.சுவாமிநாநன் வலியுறுத்தியுள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S

English Summary

As per the High Court order the caste name should be removed from the names of government schools Students Federation urges

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...

Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...

Seithipunal
--> -->