#BREAKING || வங்கக் கடலில் உருவாகிறது அசானி புயல்..தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் தெற்கு அந்தமானில் ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே 10ஆம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அசானி என பெயர் வைக்கப்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக,ஆந்திரா, ஒடிசா,மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை இதன் தாக்கம் இருக்காது எனவும் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Asani storm is developing in the Bay of Bengal


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->