கிரிக்கெட் வீரர்களின் பிரச்சனை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும்..ஜான் குமார் MLA கோரிக்கை! - Seithipunal
Seithipunal



புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரு லட்சம் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை பிரச்சனையை அரசு சரி செய்ய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சட்ட பேரவையில்  ஜான் குமார் பேசியதாவது :2018ஆம் ஆண்டு முதல் 2024ஆம ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் மூலம் கட்டுமான பணிக்கு க்கு சுமார் 100கோடி வரை கொடுத்துள்ளது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ,நமது புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்திற்க்கு மைதானங்கள் , கட்டிடங்கள் மற்றும் இதர கட்டுமான பணிகள் யாருடைய நிலத்தில் கட்டப்பட்டது. அதாவது அரசு நிலத்திலா அல்லது தனியார் நிலத்திலா?

அப்படி தனியார் நிலத்தில் என்றால் புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தில் அந்த தனியார் நிறுவனம் எந்தெந்த புரிதல் ஒப்பந்தம் அவர்களுக்குள் போடப்பட்டுள்ளது. எவ்வளவு கோடிகளிகல் இ‌‌ந்த கட்டுமானங்கள் நிறுவபட்டுள்ளது .

அதவது வந்த தகவலின் அடிபடியில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பாக கொடுத்த இந்த பல கோடிகளில் கட்டபட்ட கட்டுமானங்கள் மற்றும் மைதானங்கள் 15ஆண்டுகள் கழித்து தேய்மானம் என்ற அடிப்படையில் மிக மிக குறைந்த தொகைக்கு அந்த பல நூறு கோடி மதிப்புள்ள புதுச்சேரி கிரிக்கெட் வாரியத்தியத்திற்கு சொந்தமான இடம் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமானதாக ஆகிவிடும் அபாயம் உள்ளது .அதனால் நமது புதுச்சேரி மாநில அரசு உடனடியாக இந்த இடத்தை அரசிடம் ஒப்படைக்க பணம் கொடுத்து அரசுடைமையாக்க வேண்டும் .இதன் மூலமாக இந்திய கிரிக்கெட் வாரியம் பணத்தில் அமைத்து இருக்கும் அனைத்து கட்டுமானங்கள் அனைத்தும் புதுச்சேரி அரசு கட்டுப்பாட்டில் வந்து விடும். 

மேலும் உச்சநீதிமன்ற லோதா கமிட்டியின் பரிந்துரையின் மேல் கொடுத்துஇருக்கும் அங்கீகாரம்,புதுச்சேரி கிரிக்கெட் வளர்ச்சிக்கு மட்டுமே ,ஆனால் கடந்த ஆறு ஆண்டுகளில் புதுச்சேரியில் பிறந்த மண்ணின் மைந்தர்களுக்கு வாய்புகள் மறுக்க பட்டு இந்தியாவில் உள்ள பிற மாநில வீரர்களை இங்கு அழைத்து வந்து அவர்களின் ஆர்தார் கார்டை புதுச்சேரியில் உள்ள ஏதாவது வீட்டு விலாசத்தில் வசிப்பதாக காரணமாக காட்டி அவர்களை புதுச்சேரியில் விளையாட வைத்து நம் மன்னில் பிறந்து வளர்ந்து மண்ணின் மைந்தர்களுக்கு துரோகம் இழைத்து வருகின்றனர் .மேலும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முலம் ஆண்டுக்கு 9பிரிவுகளில் அடிபடையில் ,அதாவது ஆண்கள் -5 பிரிவு பெண்கள்-4 பிரிவு

சுமார் 180முதல் 200 வீரர்கள் வரை விளையாடுகிறார்கள் .இவர்களுக்கு சுமார் 8லட்சம் முதல் 35லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது .இது கிட்டத்தட்ட ஆண்டிற்க்கு 20முதல் 25கோடிவரை இந்த பணம் பல வெளி மாநில வீரர்கள் தவறான வழியில் வந்து பணம் பெற்று அவர்கள் சொந்த மான மானிலத்தில்தான் செலவை செய்கிறார்கள் பணபுழக்கமும் அவர் அவர் சொந்த மாநிலத்தில் தான் இருக்கிறது , இதை நமது புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வீரர்களை வைத்து விளையாடினால் அந்த மொத்த பணமும் நம் மானிலந்தில் புழங்கும் நம் மானில மக்கள் முன்னேற்றம் அடைவார்ரகள். 

ஆகவே புதுச்சேரி ஆளுநர் மற்றும் முதல்வர் ,சபாநாயகர், அமைச்சர்கள் மேலும் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றி புதுச்சேரி கிரிக்கெட் விளையாடி கொண்டு இருக்கும் சுமார் ஓரு லட்சம் விளையாட்டு வீரகளுக்கு ஒரு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன் என  ஜான் குமார் பேசினார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attention should be drawn to the issue of cricketers John Kumar MLAs request


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->