கோவையில் டிரோன்கள் பறக்கத் தடை - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


இன்று அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3.28 லட்சம் மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெற்று இந்தத் திட்டம் மூலம், பயன் பெறுவார்கள்.

இந்தத் திட்டத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கோவை அரசு கலைக் கல்லூரியில் இன்று காலை தொடங்கி வைக்கிறார். அதன் பின்னர் செம்மொழி பூங்கா வளாகத்தில் அமைக்கப்படும் கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மைய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.40 கோடியில் கட்டப்பட்ட உயிரியல் துறை மற்றும் சமூக அறிவியல் துறைக்கான புதிய கட்டிடம், வ.உ.சி. மைதானம் அருகே ரூ.1 கோடியில் கட்டப்பட்ட உணவு வீதி, புலியகுளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கட்டப்பட்ட புதிய கட்டிடம் உள்ளிட்டவற்றை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பீளமேடு, ரேஸ்கோர்ஸ், உக்கடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தற்காலிகமாக RED ZONE பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ban on drones fly in coimbatore for mk stalin come


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->