பொங்கல் பரிசு தொகை பெற வங்கி கணக்கு கட்டாயம்! மாதம் ரூ.1000 வழங்குவதற்கான திட்டத்தின் முன்னோட்டமா?
Bank account is mandatory to receive Pongal prize money
தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவ்வாறு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகையை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் ஆதார் எண் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதால் பயனாளர்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு எண், வங்கி கணக்கு எண் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் கூட்டுறவுத்துறை ஆய்வு மேற்கொண்டதில் தமிழகத்தில் உள்ள 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 14.60 லட்சம் பேருக்கு வங்கி கணக்குகள் இல்லாதது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வங்கி சேமிப்பு கணக்கு இல்லாதவர்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்க மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக அரசு குடும்ப தலைவி களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வரும் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகை வழங்கும் பணியில் எந்த ஒரு தடங்கலும் இன்றி நடைபெற்றால் மார்ச் மாதத்திற்கு பிறகு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Bank account is mandatory to receive Pongal prize money