சென்னையில் முக்கிய பகுதிகளில் 7 மாதங்கள்  மின்சார ரயில்கள் ரத்து.. அதிர்ச்சியில் பயணிகள்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் பொதுமக்களின் முக்கிய போக்குவரத்து சேவையான மின்சார ரயில் போக்குவரத்து சென்னையின் குறிப்பிட்ட வழித்தடங்களில் அடுத்த ஏழு மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னை கடற்கரை - வேளச்சேரி மின்சார ரயில் சேவை முக்கியமான பல பகுதிகள் வழியாக பயணிக்கிறது.

இந்த வழித்தடத்தில் நான்காவது ரயில் பாதை வேலை நடைபெற உள்ளதால் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி வரை 7 மாத காலத்திற்கு சென்னை கடற்கரை முதல் சேப்பாக்கம் வரையிலான மின்சார ரயில் சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதற்கு இணை நடவடிக்கையாக பொதுமக்கள் போக்குவரத்திற்கு வேறு வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Beach station to Chepauk train service stop


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->