பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கருக்கு என்ன ஆனது?! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!
bharathi baskar admitted hospital
தமிழகத்தின் பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களில் ஒருவரான பாரதி பாஸ்கர் திடீரென நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழர்களின் சிறப்பான தனித்தன்மையில் ஒன்றாக இருப்பது பட்டிமன்றம். உலகில் வேறு எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுவதில்லை. தமிழுக்கே உள்ள ஒரு சிறப்பான சொல்லாற்றல் மிகுந்ததாகவும், நல்ல சுவை மிகுந்ததாகவும், சமூகத்துக்கு நல்ல கருத்துகளை தெரிவிக்க வருவதாகவும் இருப்பது பட்டிமன்றம்.
இதில், பட்டிமன்றம் என்றால் சாலமன் பாப்பையா முதலில் அனைவரும் நினைவுக்கு வருவார். அவருக்கு அடுத்தபடியாக பட்டிமன்றப் பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர் நினைவுக்கு வராமல் இருக்க மாட்டார்.
அவரின் பேச்சு திறமைக்கும், நகைச்சுவை தன்மைக்கும் பலரும் அவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது என அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளியான முதல் தகவலின்படி, பாரதி பாஸ்கருக்கு மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது , அவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
English Summary
bharathi baskar admitted hospital