#தமிழகம் | அரசு பள்ளி மாணவியை கழுத்தறுத்து கொலை செய்ய முயற்சி - இலங்கை தமிழன் செய்த கொடூரம்! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பவானிசாகர் அருகே கூலித் தொழிலாளியின் 16 வயது மகள் ஒருவர், பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை 5:45 மணி அளவில் மாணவி பள்ளியை விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர், திடீரென மாணவியை பிடித்து இழுத்து கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்து பொதுமக்கள் ஓடி வந்து, இரத்த வெள்ளத்தில் மிதந்த மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதற்கிடையே மாணவியை கொலை செய்ய முயன்ற அந்த வாலிபன் தப்பி ஓடி உள்ளான். இந்த சமத்துவம் குறித்த சிசிடிவி கட்சிகளின் அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், தப்பியோடியவன் பவானிசாகர் இலங்கை தமிழர் முகமை சேர்ந்த நவீன் குமார் தெரிய வந்துள்ளது.

மேலும், நவீன் குமார் ஏற்கனவே அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து தொல்லை கொடுத்த போக்ஸோ  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும், தற்போது ஜாமீனில் வெளியே வந்த நவீன் குமார் மாணவியை பின்தொடர்ந்து வந்து கொலை செய்ய முயற்சித்து இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bhavani Sagar School Girl Attempt Murder


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->