ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் மிகப்பெரிய போராட்டம்..தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!
Biggest protest in Chennai in August Tamil Nadu Sugarcane Growers Association
கரும்பு நடவுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வேலூர் மாவட்டம் ,திருவலம் அருகே அம்முண்டி பகுதியில் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது.இந்த ஆலையின் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் மாநில பொருளாளர் பெருமாள் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரும்பு டன் ஒன்றுக்கு 5500 விலை அறிவித்திட வேண்டும் ,வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் எத்தனை நாள் உற்பத்தியை துவக்கிட வேண்டும்,மின்வாரியம் வேலூர் ஆலைக்கு தர வேண்டிய பாக்கித் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்,வெட்டுக் கூலியை முத்தரப்பு கூட்டம் நடத்தி முறை படுத்திட வேண்டும், வருவாய் பங்கீட்டு சட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய எஸ் ஏ பி முறையை சட்டம் ஆக்கி அமல்படுத்திட வேண்டும்,
கரும்பு நடவுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கிட வேண்டும், தனியார் ஆலைகள் கரும்பு திருடுவதை தடுத்திட வேண்டும் ,ஓய்வு பெற்றவர்களை மறுநாள் நியமனம் செய்யும் முறையை கைவிட்டு விட்டு இளைஞர்களுக்கு வேலை அளித்திட வேண்டும், ஆலை மூலம் இயங்கும் பெட்ரோல் பங்க் மற்றும் லாரிகள் செல்ல சர்வீஸ் சாலை அமைத்திட வேண்டும்உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி அப்போது கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மாநில பொருளாளர் பெருமாள் கூறியதாவது:தமிழக அரசு கடந்த தேர்தல் வாக்குறுதியின் போது கரும்பு டன்னுக்கு நான்காயிரம் தருவதாக வாக்குறுதி அனைத்தும் இதுவரை தராமல் இருக்கின்றது. இப்போது ஐயாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்கிட வேண்டும் மற்றும் முறையாக உரங்களையும் வழங்கிட வேண்டும்.வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் திமுக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் .வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம் என்றார்.
English Summary
Biggest protest in Chennai in August Tamil Nadu Sugarcane Growers Association