கோடியக்கரை : பறவைகள் சரணாலயத்தில் கணக்கெடுக்கும் பணி தீவிரம்.!
birds survey work serious in kodiyakarai bird sanctuary
நாட்டில் உள்ள பறவைகள் சூழலுக்கு ஏற்றவாறு இடம்பெயர்வது வழக்கம். அதாவது இனப்பெருக்கம் செய்வதற்கு தேவையான தகுந்த இடச் சூழல் எங்கு நிலவுகிறது அங்கு இடம்பெயரும்.
அதன் படி, தமிழகத்தில் பறவைகள் வலசைக் காலம் செப்டம்டர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நீடிக்கும். இந்தக் காலத்தில் குளிர்காலம் தொடங்கியதன் அறிகுறியாக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுப் பறவைகள், வெப்ப மண்டல பகுதியான தமிழகத்திற்கு அதிகளவு வந்து செல்லும்.
இந்த நிலையில், ஒவ்வொரு வருடமும் நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு பல நாடுகளில் இருந்து 290 வகையான பறவைகள் வந்து செல்கின்றன. அவற்றை கணக்கெடுக்கும் பணியும் நடைபெறும்
அந்த வகையில், இந்த ஆண்டும் பறவைகள் சரணாலயத்திற்கு லட்சக்கணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளன. இந்த நிலையில், அவற்றை கணக்கெடுக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
அதன் படி, இந்த கணக்கெடுக்கும் பணியில் திருச்சி மண்டல தலைமை வனபாதுகாவலர் சுரேஷ், நாகை வனஉயிரின காப்பாளர் யோகேஸ்குமார்மீனா, உதவி வன அலுவலர் கிருபாகரன், கோடியக்கரை வனச்சரகர் அயூப்கான், வனத்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் என்று மொத்தம் 47 பேர் 12 குழுக்களாக பிரிந்து செயல்படுகின்றனர்.
இந்த ஆண்டு போதுமான அளவிற்கு மழை பெய்ததால் இங்கு பறவைகளுக்கு ஏற்ற சூழ்நிலை நிலவுகிறது. மேலும், இந்த கணக்கெடுப்பின் முடிவில் இந்த ஆண்டுக்கான பறவைகள் வரத்து தொடர்பான முழு விவரங்கள் தெரிய வரும் என்று வன அலுவலர் அயூப் கான் தெரிவித்தார்.
English Summary
birds survey work serious in kodiyakarai bird sanctuary