யாரோ ஒரு பெண், எங்கோ போய் லவ் பண்ணதுக்காக... மிக கொச்சையாக விமர்சனம் செய்த திமுக! கொந்தளிக்கும் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதுமே, பெண்கள் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்திருக்கும் நிலையில், சென்னை மாமன்றக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி 184 ஆவது வார்டு உறுப்பினரும், 14 ஆம் மண்டலக் குழுத் தலைவருமான எஸ்.வி.ரவிச்சந்திரன் என்பவர், பாதிக்கப்பட்ட மாணவியை, மிகவும் கொச்சையாக விமர்சனம் செய்த காணொளி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. 

குற்றவாளி தங்கள் கட்சிக்காரன் என்பதற்காக, பாதிக்கப்பட்ட மாணவியைத் தரக்குறைவாகப் பேசும் தைரியம் யார் தந்தது? 

இந்த எஸ்.வி.ரவிச்சந்திரன் என்ற நபர், கடந்த நில ஆக்கிரமிப்புக்குப் பெயர் போன 2006 - 2011 திமுக ஆட்சியில், பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள காலி இடங்கள், கட்டிடங்களை எல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்த குற்றத்திற்காக, குண்டாஸ் வழக்கில் கைதானவர். ஒட்டு மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் திமுகவில், இது போன்ற நபர்களை மாமன்றத்திற்கு அனுப்பியதில் ஆச்சரியமில்லை. 

பஞ்சினால் செய்த சாட்டை என்கிறார் இந்த ரவிச்சந்திரன். கோவையில் எனது இல்லத்தில் இருக்கும் அந்தச் சாட்டையைக் கொண்டு வருகிறேன். பஞ்சுச் சாட்டைதானே. அவர் மீதே சோதித்துப் பார்க்கலாம். தயாரா? #ShameOnYouStalin" என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதேபோல் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "யாரோ ஒரு பெண், எங்கோ போய் லவ் பண்ணதுக்காக எங்கேயோ யாரோ கேஸ் போட்டதுக்காக பஞ்சு வெச்ச சாட்டையை வைத்து அடித்துக்கொள்வதா என்று திமுக வின் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் கேட்டிருப்பது கேவலத்தின் உச்சக்கட்டம். 

அவள் தமிழ் பெண். தமிழச்சி. எங்கோ போய் லவ் பண்ணவில்லை, தமிழ்நாட்டின் மையத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கிறாள். யாரோ கேஸ் போடவில்லை, தமிழகத்தின் உயர்நீதி மன்றம் தானாகவே முன்வந்து விசாரிக்கிறது. தமிழின துரோகி திமுகவின் திராவிட மாடல் இது தான் என்பதை மாணவ சமுதாயம் உணர்ந்து விட்டது" என்று நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai Condemn top DMK Govt MK Stalin AU Case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->