எனக்கு ஹிந்தி தெரியுமா? தெரியாதா., பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் விளக்கம்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது, "இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டும்.

இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றாக கருத வேண்டும். இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும், இந்திதான் நாட்டின் அதிகாரபூர்வ மொழியாகும். ஆட்சியை நடத்த இந்திதான் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார்.

அமைச்சரவையின் 70% நிகழ்ச்சி நிரல்கள் இனி இந்தியில் தான் நடத்தப்படும். இனி வரும் நாட்களில் வடகிழக்கு மாநிலங்களிலும் 10-ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும். மாணவர்கள் இந்தி மொழித் தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் அதிர்வலையாளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று சென்னை மாநகராட்சி நிதி நிலை அறிக்கையில், இந்தி மொழி வேண்டாம் என திமுக கவுன்சிலர்கள் கூறிய நிலையில், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தனக்கு இந்தி மொழி தெரியாது என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உமா ஆனந்தன், "எனக்கு இந்தி மொழி தெரியும் ஆனால், வேண்டும் என்றே பிரச்சனை வேண்டாம் என்று தான் எனக்கு இந்தி மொழி தெரியாது என்று மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தேன்" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp counselor uma aananthan say about hindi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->