தமிழ்நாட்டில் நடப்பது சர்வாதிகார ஆட்சியா? குற்றத்திற்கு எதிராக பேசினால் குரல்வளை நெறிக்கப்படுமா? தமிழிசை காட்டம்
bjp members arrested in chennai
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைநாடு முழுவதும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
குறித்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் சமோசா ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த அநீதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகளுக்கு பா.ஜ.க. தலைமை அறிவுறுத்தியதின் பேரில் தமிழக பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெற இருந்த வாஜ்பாய் பிறந்தநாள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.. சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமையை கண்டித்து சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையை கண்டித்து தமிழிசை சவுந்தரராஜன் இவ் வாறு பேசியுள்ளார்,
தமிழகத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டு இருக்கிறார். ஒரு பெண் மட்டுமல்ல தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதற்கு போராடி தான் வருவேன்.
அதாவது போராட்டத்திற்கு இங்கே வந்த போலீசார் அங்கு பாதுகாப்பு கொடுத்து இருக்கலாம். பாதுகாப்பு கொடுத்து இருந்தால் பெண் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டாங்களே. இது என்ன அடக்குமுறையா? நாங்கள் எல்லாம் தீவிரவாதியா? என்று காட்டமாக கூறியுள்ளார்.
English Summary
bjp members arrested in chennai