ஒரே நாளில் இரண்டு விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
bomb threat to chennai and coimbatore airport
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலைய ஆணையகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு இன்று காலை மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில், துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. உடனே இது தொடர்பாக விமான நிலைய பாதுகாப்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே இது போன்று ஆறு முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததால், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதன் முடிவில் இந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தி புரளி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அடங்குவதற்குள் இதே போன்று, கோவை விமான நிலையத்திற்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலையோ அடுத்து கோவை விமான நிலையத்தில் இருந்து புறப்பட இருந்த விமானங்களில் பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் உடைமைகள், மெட்டர் டிடெக்டர்கள் மூலமும், மோப்பநாய்கள் உதவியுடனும் சோதனை செய்யப்பட்டது. இருப்பினும் இந்த சோதனையில் மர்ம பொருட்கள் எதுவும் கிடைக்காததால், இந்த மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது.
இதற்கிடையே, இந்த மின்னஞ்சல்கள் குறித்து போலீஸார் நடத்திய ஆய்வில், இவை துருக்கி நாட்டு தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அனுப்பப்பட்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பி வரும் நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் சோதனை காரணமாக கோவை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
bomb threat to chennai and coimbatore airport