ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்.. போக்சோவில் கைது.! - Seithipunal
Seithipunal


ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திச் சென்ற வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் பகுதியில் வசித்து வரும் 17 வயதுடைய சிறுமி காணவில்லை என்று அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு சிறுமியை தேடி வந்த நிலையில் பேருந்து நிலையத்தில் ஒரு வாலிபருடன் நிற்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சிறுமியுடன் இருந்தவர் நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த அஸ்வின் என்பதும், அவர் காரமடையில் உள்ள சித்தி வீட்டில் தங்கிக்கொண்டு நூற்பாலை வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. 

இந்நிலையில் அச்சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அஸ்வின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy cheat and kidnapped school girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->