ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்.. போக்சோவில் கைது.!
Boy cheat and sexual Harrasment for school girl
பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மருதவனம் கிராமத்தில் லெனின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜ்கண்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ராஜ்கண்ணா அதே பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இது குறித்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜ்கண்ணாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Boy cheat and sexual Harrasment for school girl