ரோஸ்மில்க் குடித்த சிறுவன் உயிரிழப்பு.. காவல்துறயினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


ரோஸ்மில்க் குடித்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கண்ணகி நகர் குடிசைமாற்று வாரியத்தில் வசித்து வருபவர் மணிகண்டன் . இவரது மகன் வசந்தகுமார் அங்குள்ள ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வீட்டின் அருகே உள்ள கடையில் ரோஸ்மில்க் குடித்து விட்டு விளையாடி கொண்டிருந்தார். அப்போது, திடீரென மயக்கமுற்ற அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த பொதுமக்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைக்காரரிடம் நடத்திய விசாரணையில் முருகானந்தம் என்பவர் வீட்டில் வைத்து தயாரிக்கும் ரோஸ் மில்க் கடைகளில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்தார்.

இதனை அடுத்து, சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy Death after drink Rose milk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->