பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர்.. கைது செய்த போலீஸார்.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து யாரோ ஒரு மர்ம நபர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருவதாக புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சிவக்குமார், காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் சமூக வலைதளங்களில் ஆபாச புகைப்படத்தை பதிவேற்றிய மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டதில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கணேசனின் மகன் முனீஸ்வரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy published the photo morphing of the woman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->