"பிறந்தநாள்".. கேக் வாங்கி வரும்படி கூறிவிட்டு சென்ற சிறுவன்... ஏரியில் பிணமாக மீட்பு..! போலீசார் விசாரணை - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்தநாள் கேக் வாங்கி வரும்படி கூறிவிட்டு சென்ற சிறுவன் ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தூசி பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவரது மனைவி கீதா. இவர்களது மகன் இளமாறன்(8) அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வந்தான். இந்நிலையில் இளமாறனுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் மாலை பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்த இளமாறன், பெற்றோரிடம் கேக் வாங்கி வரும்படி கூறிவிட்டு, நண்பர்களுடன் விளையாடுவதற்கு சென்றுள்ளான்.

இதையடுத்து வெகு நேரமாகியும் இளமாறன் வீட்டிற்கு வராததால் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் இளமாறன் கிடைக்காததால் இதுகுறித்து தூசி காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், இன்று காலை செய்யாறு தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தூசி பகுதியில் உள்ள குளம் மற்றும் சித்தேரியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். 

இதில் சிறுவன் சித்தேரியிலிருந்து பிணமாக மீட்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Boy rescued from dead body in lake in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->