சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 690 போதை மாத்திரை வைத்திருந்த சிறுவன் கைது!
boy with 690 drug pills was arrested at the Central Railway Station
சென்னை : சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்த சிறுவனை பாதுகாப்பு படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படையின் மதுசூசனன் ரெட்டி தலைமையில் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது நடைமேடை 1ம் பிளாட்பாமில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் சுற்றித்திரிந்த வாலிபரை ரயில்வே போலீஸ் பாதுகாப்பு படையினர் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படையினர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில் ஒரு அட்டைக்கு 10 மாத்திரைகள் என்ற அடிப்படையில் மொத்தம் 690 முதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் அந்த சிறுவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில் அவர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுவன் என்பதும், ஆந்திராவில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்துக்கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதனைய டுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் சிறுவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
English Summary
boy with 690 drug pills was arrested at the Central Railway Station