பற்றி எரியும் கோவை! பதற்றத்தை தணிக்க போலீஸ் அணி வகுப்பு!
Burning Coimbatore and Police team class to reduce tension
நான்கு கம்பெனி போலீசார் கோவை மாநகரில் குவிப்பு!
இந்து மதம் பற்றி தவறாக பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து தமிழக முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை இந்து முன்னணியினர் சார்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி ராமசாமி ஆ.ராசாவை பற்றி இழிவான வார்த்தைகளால் பேசி இருந்தார். இதனை அடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் குனியமுத்தூரில் இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தியாகுவின் கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் கூற்றி தீ வைத்துள்ளனர். இந்த சம்பவம் இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் நடைபெற்றுள்ளது. காருக்கு வைக்கப்பட்ட தீயை அப்பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு அனைத்தனர் . இதனை அடுத்து குனியமுத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தீவைப்பு சம்பவங்கள் நடைபெறும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை கண்டறிந்து அதில் பதிவாகியுள்ள காட்சிகள் வைத்து இத்தகைய தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் கோவை மாநகரில் நான்கு கம்பெனி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் ரோந்து பணியும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் கோவை மாநகரில் போலீஸ் அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கோவை மாநகரில் தற்போது நிகழ்வு பதட்டத்தை தணிக்கவும் இயல்பு நிலைக்கு திரும்பவும் போலீசார் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Burning Coimbatore and Police team class to reduce tension