பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை - விசாரணையில் சிக்கிய பேருந்து ஓட்டுநர்.!
bus driver arrested for harassment in dharmapuri
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ். தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த 17 வயது மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
தொடர்ந்து மாதேஷ் அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து தகவல் தெரிந்த மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, சம்பவம் தொடர்பாக தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் படி போலீசார் விசாரணை நடத்தி போக்சோ வழக்குப்பதிவு செய்து மாதேசை கைது செய்தனர். இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதன் முடிவில் மாதேஷ் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதியானதால் அவருக்கு 15 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
English Summary
bus driver arrested for harassment in dharmapuri