கோவையில் இறைட்சி கடைகள் இயங்க தடை! மீறினால் கடும் நடவடிக்கை!
Butcher shop Kovai mahavir jayanti
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் (04.04.2023) இறைட்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி இறைட்சி கடைகள் திறக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எனவும் கோவை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை உலகம் முழுவதும் மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக அரசின் மதுபான கடைகளான டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள் மூடியிருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சியில் நாளை மறுநாள் (04.04.2023) இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி நடந்தால், கடைகள் மற்றும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
English Summary
Butcher shop Kovai mahavir jayanti