சுங்கக்கட்டணம் ரத்து!....சாலையை சீரமைக்க வேண்டுகோள்! - Seithipunal
Seithipunal


மதுரை-தூத்துக்குடி இடையே உள்ள நான்கு வழிச்சாலை முக்கியத்துவம் பெற்று விளங்கி வரும் நிலையில், தூத்துக்குடி துறைமுகத்துக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்த சாலை வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. இதற்கிடையே இந்த சாலை கடந்த 2 ஆண்டுகளாக  குண்டும், குழியுமாக காணப்பட்டதால், போக்குவரத்து பயணிகள் அவதியடைந்ததோடு மட்டுமல்லாமல், அடிக்கடி விபத்துகளும் நடைபெறுகிறது.

 மேலும் நான்கு வழிச்சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால்  அடிக்கடி  விபத்துகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டும் வாகன ஓட்டிகள், நான்கு வழிச்சாலையில் உள்ள  சாலை சந்திப்புகளிலும் மின் விளக்குகள் எரிவதில்லை என  தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், மதுரை-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எலியார்பத்தி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், சாலை சீர் செய்யப்படாமல் உள்ளதால் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. மதுரை-தூத்துக்குடி இடையே உள்ள நான்கு வழிச்சாலை பிரதான சாலையாக விளங்கி வருவதால், சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cancellation of tolls on the four lane road Request to repair the road


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->