அட மானங்கெட்ட திராவிட.., உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமோ, சூடு சுரணையோ கிடையாதா? - கார்ட்டூனிஸ்ட் பாலா! - Seithipunal
Seithipunal


சமூக ஆர்வலரும், கார்ட்டூன் மூலம் ஆளும் அரசை நேர்வழி படுத்துபவருமான கார்ட்டூனிஸ்ட் பாலா தனது முகநூல் பக்கத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக திராவிட கழக தலைவர் கி வீரமணி கூறிய கருத்தை விமர்சித்து தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

அதில், "முதலில் எதிர்ப்பது.. அது வேலைக்கு ஆகவில்லை என்றால் அதை டகால்னு தங்கள் அடையாளம் போல் ஆட்டையப்போட வேண்டியது எனும் அதே ஆரியர்களின் யுக்தி படி இயங்குவதுதான் திராவிட கூட்டத்தின் வேலை. 

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த ஆரம்ப நாட்களில் அது ஒரு சாதிவெறி விளையாட்டு.. காட்டுமிராண்டித்தனமானது என்றெல்லாம் ஈ.வெ.ராமசாமியார் பக்த கோடிகள், கிளப் ஆட்கள் ரைட்டப் எழுதி குவித்தார்கள்.. 

அந்த உருட்டல்களை எல்லாம் கண்டுக்காமல் தமிழ் பிள்ளைகள் துப்பிவிட்டு போராட்டத்தை வெற்றி பெற செய்தார்கள்.. கடைசி நாளில் பலர் ரத்த காயங்களுடனும்..  மீனவ மக்கள்  தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தது உட்பட எண்ணற்றபேரின் தியாகத்தால் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் புரட்சியானது.. 

ஆனால் வழக்கம் போல் தமிழர்களின் அடையாளங்களை ஆட்டையப்போட்டு தின்று செரித்து கொழுத்துப்போய்  முட்டப்போண்டாக்களாக திரியும் திராவிட கூட்டம் திராவிட வரலாற்றுக்கு கிடைத்த வெற்றி என்று ஆரம்பிக்கிறது.. 

இந்த செய்தியைப் பார்த்ததும் அசிங்கம் அசிங்கமா திட்டணும் போலதான் வருது.. 

இல்லாத டுபாக்கூர் திராவிட ஒட்டுண்ணி இனத்துக்கு ஏது வரலாறு.. 

அட மானங்கெட்ட திராவிட மானமிகுக்களே.. உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமோ சூடு சுரணையோ கிடையாதா என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.." என்று கடுமையாக தனது பதிவில் கார்ட்டூனிஸ்ட் பாலா தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cartoonist Bala condemn to ki veeramani for Jallikattu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->