திருப்பரங்குன்றம் விவகாரம் - பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு.!
case file against bjp leader annamalai and h raja for thiruparangundram case
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ். இவர் மாநகர காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபுவை சந்தித்து புகார் மனு ஒன்று கொடுத்தார். அந்த மனுவில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-
"தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் மதுரை திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகன் கோவிலுக்கு சொந்தமானது என்றும், அங்கிருக்கும் தர்கா ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், இதுதொடர்பாக 1931-ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சில் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது என்றும் பேசி உள்ளனர். இது மத கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட காவல் ஆணையர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாநகர சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதன் படி மத கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் எச்.ராஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
case file against bjp leader annamalai and h raja for thiruparangundram case