வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடிய வழக்கு! கார் ஓட்டுநர் கைது! - Seithipunal
Seithipunal


சென்னை: பட்டினப்பாக்கத்தில் பங்கு சந்தை வர்த்தகர் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடிய வழக்கில் வீட்டின் மாஜி கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை எம்ஜிஆர் நகர் சத்யதேவ் அவன்யூவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கோபாலகிருஷ்ணன். இவர் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது வீட்டில் சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

அவர் மீது கோபாலகிருஷ்ணன் அதிக நம்பிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சரவணனின் செயல்பாடுகள் சரியில்லாததால் கடந்து 27ஆம் தேதி அவரை பணியில் இருந்து கோபாலகிருஷ்ணன் நீக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் கோபாலகிருஷ்ணன் வீட்டில் உள்ள லாக்கர் சாவியை தேடிய போது காணவில்லை. இதனையடுத்து வீட்டில் லாக்கரை உடைத்து பார்த்தபோது அதிலிருந்து 250 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் 25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டு இருப்பதைக் கண்டு கோபாலகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார்.

இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறை வீட்டில் ஓட்டுனராக பணியாற்றிய சரவணன் என்பவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

case of theft of jewelry worth 2 crore rupees at home Car driver arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->