திடீர் திருப்பம்! ரூ.4 கோடி விவகாரம்! பெரும் புள்ளிக்கு ஆப்பு! சிபிசிஐடி அதிரடி! - Seithipunal
Seithipunal


தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி விவகாரம் தொடர்பாக தாம்பரம் ரயில்வே கேண்டின் உரிமையாளருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலில் ஏழு நடைபெற்றது. முதற்கட்டமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக ஜூன் 6ஆம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு புறப்பட்ட ரயிலில் சட்டவிரோதமாக  ரூ.4 கோடி எடுத்துச் செல்லப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அதிகாரிகள் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை செய்து 3 பேரை கைது செய்தது. அது மட்டுமில்லாமல் அவர்கள் வைத்திருந்த ரூ. 4 கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு தொடர்பாக பாஜக திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் நயனார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாஜக மேல்மட்ட நிர்வாகி எஸ்.ஆர் சேகர், நீல முரளி யாதவ், முருகன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

தற்போது சௌகார்பேட்டையை சேர்ந்த பிரபல நகைக்கடை உரிமையாளர் ஒருவர் மூலம்  ரூ.4 கோடி ரூபாய் கை மாதிரி ஆக தகவல் வெளியாகி உள்ளது. நகைக்கடை உரிமையாளர் உறவினர் மூலம் பணத்தை கொடுத்ததாக கூறப்படும் நிலையில் நகை கடை உரிமையாளருக்கு சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தாம்பரம் ரயில்வே கேன்டீன் உரிமையாளர் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID police summons owner of Tambaram railway cant in connection with 4 crore issue


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->