CBI விசாரணையா? CPI விசாரணையா? - சர்சையைக் கிளப்பிய அதிமுக போராட்ட பேனர்.!
cbi enquiry or cpi enquiry admk protest bannar controversy
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம், மாதவச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரைக்கும் 61 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரப்பரப்பைக் கிளப்பியது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 61 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களுக்கு CBI விசாரணை வேண்டும் என்று அதிமுக சார்பில் புதுச்சேரியில் நடந்த போராட்டத்தில், 'CPI விசாரணை வேண்டும்' என்று சிலர் பேனர் ஏந்தி நின்றிருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.
English Summary
cbi enquiry or cpi enquiry admk protest bannar controversy