கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டம்!  - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி அருகே அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் பகுதியில் சுமார் 1144 ஹெக்டேர் பரப்பளவில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக கிள்ளியூர் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய 1144 ஹெக்டேர் பரப்பில் ஐஆர்இஎல் (IREL) நிறுவனம் சுரங்கம் அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

மேலும், இந்த அணுக்கணிம சுரங்க திட்டம் தொடர்பாக வருகின்ற அக்டோபர் ஒன்றாம் தேதி பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதற்கிடையே, கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கதிரியக்கத் தன்மை கொண்ட அணுக்கனிமங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டால், அணுக்கதிர் இயக்க பாதிப்பு ஏற்படும் என்றும், மோனோசைட் உள்ளடக்கிய கனிமப் படிமத்தினை அகழ்வு செய்ய ஐஆர்இஎல் நிறுவனத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாகவும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central government plans nuclear mine in Kanyakumari


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->