மூதாட்டியின் கண்ணில் மிளகாய்ப்பொடி வீசி தங்க சங்கிலி பறிப்பு.. போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நகரில் 65 வயதான சுருளியம்மாள் என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் முத்து பாண்டியன் அப்பகுதியில் அரிசி ஆலை வைத்துள்ளார். நேற்று காலை சுருளியம்மாள் அரிசி ஆலை அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் மாவு அரைத்து தருமாறு சுருளியம்மாளிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் வேலையாட்கள் இன்னும் வரவில்லை சிறிது நேரம் கழித்து வருமாறு அந்த பெண்ணிடம் கூறிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த பெண் கையில் வைத்து இருந்த மிளகாய் பொடியை சுருளியம்மாள் கண்ணீர் வீசினார். இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் சுருளியம்மாள் அலறி துடித்தார். 

அப்போது அந்தப் பெண் சுருளியம்மாளின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை படித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதில் சுருளியம்மாளின் சத்தம் கேட்டு அருகில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் தங்க சங்கிலி பறித்துக் கொண்டு ஓடிய பெண்ணை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் நடத்தி விசாரணையில் அந்த பெண் மஞ்சள் குளத்தை சேர்ந்த ஜோதிலட்சுமி என்பது தெரிய வந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோதிலட்சுமியை கைது செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chain snatching in thenkasi young woman arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->