தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1.நேற்று மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர புயல் பிப்பர்ஜாய், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று நள்ளிரவு சற்றே வலுக்குறைந்து மிகத்தீவிர புயலாக இன்று காலை 08:30 மணி அளவில் வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து தென்மேற்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து மேற்கு தென்மேற்கே சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) தென்மேற்கே சுமார் 310 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது மேலும் இன்று இரவு வரை, வடக்கு திசையிலும், அதன் பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15ஆம் தேதி மாலை மிக தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும்.

அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125-135 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.

2. மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

14/06/2023 முதல் 16/06/2023 வரை; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17/06/2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chance of rain in 5 days from today in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->