பாலின் பெயரை மாற்றி பகல்கொள்ளை ..ஆவின் நிறுவதத்துக்கு எதிராக சீறும் அன்புமணி ராமதாஸ்!  - Seithipunal
Seithipunal


ஆவின் கிரீன் மேஜிக் பெயரை மாற்றி மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா? என்பதை அரசும், ஆவின் நிறுவனமும் விளக்க வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் கிரீன் மேஜிக் என்ற பெயரில் புதிய பச்சை உறை பால் வரும் 18-ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக ஆவின் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் பாலின் தன்மை குறித்த விவரங்களோ, விலையோ இல்லை; மாறாக விட்டமின் ஏ, டி ஆகியவை சேர்க்கப்பட்டிருப்பதாக மட்டும்தான் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புதிய பாலின் தன்மைகள் குறித்து ஆவின் நிறுவன அதிகாரிகளிடம் விசாரித்த போது தான் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் தெரியவந்துள்ளன. அளவு குறைப்பு, விலை அதிகரிப்பு ஆகிய இரண்டை தவிர புதிய பாலில் எந்த புதுமையும் இல்லை. தற்போது ஆவின் கிரீன் மேஜிக் பால் 500 மிலி ரூ.22-க்கு விற்கப்படுகிறது. அதில் 4.5 சதவீதம் கொழுப்புச் சத்து, 9 சதவீதம் கொழுப்பு அல்லாத திடப்பொருள்கள் உள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாலிலும் இதே சத்துகள், இதே அளவில்தான் உள்ளன. 

ஆனால், கிரீன் மேஜிக் ஒரு லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 900 மிலி ரூ.50 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிரீன் மேஜிக் பால் 500 மி.லி ரூ.22க்கு விற்கப்படும் நிலையில், கிரீன் மேஜிக் பிளஸ் 450 மிலி உறைகளில் ரூ.25க்கு விற்கப்படும். அப்படிப் பார்த்தால் கிரீன் மேஜிக் பிளஸ் பாலின் விலை லிட்டர் ரூ.55 ஆகும். இது கிரீன் மேஜிக் பாலின் விலையை விட லிட்டருக்கு ரூ.11 அதிகம் ஆகும். ஆவின் கிரீன் மேஜிக் பாலுடன் பிளஸ் என்ற வார்த்தையை கூடுதலாக சேர்ப்பதற்காக ரூ.11 அதிகம் வசூலிப்பது பகல் கொள்ளையாகும்.

பாலின் விலை உயர்வு அதிகமாக தெரியக்கூடாது என்பதற்காக ஓர் உறையின் விலையை ரூ.3 உயர்த்தி விட்டு, பாலின் அளவை 50 மிலி குறைத்திருப்பது அப்பட்டமான மோசடி ஆகும். பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனமே இத்தகைய மோசடிகளில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது. அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் மக்களுக்கு நன்மை செய்வதில் புதுமைகளை புகுத்துவது வரவேற்கத்தக்கது. ஆனால், மக்களை ஏமாற்றுவதில் இத்தகைய புதுமைகளை புகுத்தக் கூடாது. பெயரை மாற்றி மக்களை ஏமாற்றுவது தான் திராவிட மாடலா? என்பதை அரசும், ஆவின் நிறுவனமும் விளக்க வேண்டும்.

ஆவின் நிறுவனத்தின் இந்த மோசடி மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காகத் தான், புதிய பால் அறிமுகம் குறித்த செய்திக்குறிப்பில் பாலின் தன்மை குறித்தும், விலை குறித்தும் எந்தத் தகவலையும் ஆவின் நிறுவனம் வெளியிடவில்லை. இந்த நடத்தையை என்ன பெயரிட்டு அழைப்பது?. அதிக விலை கொண்ட ஆவின் கிரீன் மேஜிக் பிளஸ் பாலை அறிமுகம் செய்யும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஒரு லிட்டர் ரூ.44 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் ஆவின் கிரீன் மேஜிக் பாலை நிறுத்தாமல், இப்போது வினியோகிக்கப்படுவதைப் போன்றே தொடர்ந்து விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Changing Pauls name to daylight robbery Anbumani Ramadoss lashes out at Aavin 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->