செங்கல்பட்டு | சாலையோரத்தில் நடமாடிய ஒட்டகம் - வனத்துறை மீட்பு.!  - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலையோரம் காலி இடத்தில் மிகவும் உடல் மெலிந்த நிலையில் ஒரு ஒட்டகம் சுற்றிக்கொண்டிருந்தது. 

இதை கண்ட பொதுமக்கள், கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  போலீசார், வண்டலூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து, மெலிந்த நிலையில் காணப்பட்ட ஒட்டகத்தை மீட்ட வனத்துறையினர், வண்டலூர் பூங்காவின் பாதுகாப்பில் வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மேலும், அந்த ஒட்டகம்  திடீரென இங்கு எப்படி வந்தது? யாராவது ஒட்டகத்தை இரவு நேரத்தில் வாகனத்தில் கடத்தி வரும்போது போலீசாருக்கு பயந்து ஒட்டகத்தை இறக்கி விட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chengalpattu Forest department rescue roadside Camel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->