தீப்பற்றி எரிந்த மதுபானக்கடை.. ஆத்திரத்தில் மதுப்பிரியர்கள் செய்த வேலை.? - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே ரயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள மதுபான கடை எண் 4014-ன் கீழ் இயங்கி வரும் அரசு மதுபானக்கடை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

தீயின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக குட்டர் பாட்டில் மற்றும் பீர் பாட்டில்கள் வெடித்து மேலும் தீ பரவியதால் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் எரிந்து நாசமாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு தீயணைப்பு துறை வீரர்கள் கடையின் பூட்டை உடைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் பழைய கட்டிடம் என்பதால் மின்கசிவு காரணமாக தீ பற்றியதா.? அல்லது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு 17, 18, 19 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால், மது அருந்த வழியில்லை என ஆத்திரத்தில் மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதா.? என செங்கல்பட்டு நகர போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chengalpattu tasmac wineshop fired


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->