சென்னை | ரூ.22 கோடி மதிப்பிளானை போதை பொருள் பறிமுதல்! சிக்கிய வெளிநாட்டவர்கள்.!
Chennai 22 crore worth drugs seized
சென்னையில் ரூ. 22 கோடி மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம் டி எம் ஏ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற 2 வெவ்வேறு சம்பவங்களில் கொக்கைன்1.8 கிலோ மற்றும் 1.4 கிலோ எம் டி எம் ஏ போதை பொருள் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் 4 வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேரை மத்திய பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவரிடம் 1.8 கிலோ கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொரு சம்பவத்தில் 1.4 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் மட்டும் சுமார் ரூ. 22 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Chennai 22 crore worth drugs seized