பரபரப்பில் சென்னை! போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - Seithipunal
Seithipunal


சென்னை : பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அவர்களை காவல்துறை கைது செய்துவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று மாலை 6 பேர் கொண்ட மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் ஆளுங்கட்சியின் மெத்தென போக்கை கண்டித்தும் உளவுத்துறையை கண்டித்தும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆம்ஸ்ட்ராங்கை  நாங்கள்தான் கொலை செய்தோம் என்று ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்கள் சரண் அடைந்துள்ளனர். ஆனால் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்தவர்களுக்கும் இவர்களுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை கண்டித்து கடந்த 1 மணி நேரத்திற்கு மேலாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்களை குண்டுக்கட்டாக போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Armstrong supporters arrested in protest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->