சென்னை | 5,000 குடும்பங்கள் வெளியேற்ற தமிழக அரசு தீட்டிய திட்டம்! வெளியான அதிர்ச்சி செய்தி! - Seithipunal
Seithipunal


பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம், மக்களை வெளியேற்றும் நடவடிக்கையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கையில், "சென்னை பக்கிங்ஹாம் கால்வாயை மேம்படுத்துவதற்கான/ மறுசீரமைப்பதற்கான முன்னோடித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சுவாமி சிவானந்தா சாலை முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வரை சுமார் 2.7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 5,000 குடும்பங்கள் வெளியேற்றப்பட உள்ளதாகவும். முதற்கட்டமாக 1200 குடும்பங்கள் வெளியேற்ற திட்டமிடப்பட்டு உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்து கொண்டிருந்தன. 

இதற்கிடையில் 2023 ஏப்ரல் 23ஆம் தேதி மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மத்திய பக்கிங்ஹாம் கால்வாயை மறுசீரமைப்பு தொடர்பாக பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்துள்ளனர். ஆனால், பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை (னுநவயடைநன ஞசடிதநஉவ சுநயீடிசவ) எதுவும் அரசு தரப்பில் பொதுவெளியில் விவாதத்திற்கு முன் வைக்கவில்லை.  

இந்நிலையில், பக்கிங்ஹாம் கால்வாய் அருகில் பல தலைமுறைகளாக குடியிருந்து வரும் மக்களின் குடியிருப்புகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் தயாராகி விட்டனர். முதற்கட்டமாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள லாக் நகர் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்காக அவர்களின் அங்க அடையாளங்களை (பயோமெட்ரிக் சர்வே) சேகரிக்கும் பணியை தொடங்கினர். மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததன் காரணமாக கணக்கெடுக்கும் பணியை பாதியில் நிறுத்தியுள்ளனர்.

பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்பு திட்டம் குறித்து விரிவான திட்ட அறிக்கையை  வெளியிட்டு, அதுசார்ந்து அரசியல் இயக்கங்கள், மக்கள் அமைப்புகள், பொதுமக்களின் கருத்தறிய வேண்டும். குறிப்பாக, செயற்கை நீர்வழி பாதையான பக்கிங்ஹாம் கால்வாய் மறு சீரமைப்பதற்காக பல்லாண்டுகளாக குடியிருந்து வரும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்புக்குள்ளாகாத வகையில் திட்டப்பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
 
மேலும், பக்கிங்ஹாம் கால்வாய் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாதிக்கப்படவுள்ள குடியிருப்பு பகுதிகள், குடும்பங்களின் எண்ணிக்கை ஆகியவற்றை வெளிப்படையாக தெரிவிப்பதோடு, அவர்களுக்கான மாற்றுக் குடியிருப்பு எவ்விடத்தில் வழங்கப்படும் என்பது குறித்தும் அரசு தன் கருத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்" என்று, ஜி.செல்வா வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai Buckingham Canal issue CPIM Condemn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->