ஆசை வார்த்தை கூறி சிறுமியை மயக்கிய புள்ளிங்கோ.! செய்த செயலால் கம்பி எண்ணும் அவலம்.!
Chennai child marriage arrest
சென்னை எண்ணூர் பகுதியில் இளைஞர் ஒருவர் சிறுமிக்கு தாலி கட்டி குடும்பம் நடத்தியதாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை எண்ணூரில் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆண்டனி என்ற 19 வயது இளைஞர் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர்.
இத்தகைய நிலையில் கடந்த 17ஆம் தேதி சிறுமியின் பெற்றோர்கள் திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி சிறுமியை தீவிரமாக தேட ஆரம்பித்தனர்.
அப்பெண் காவல்துறை விசாரணையில் சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஆண்டனி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனைத்து மகளிர் காவல் துறையின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டார்.
English Summary
Chennai child marriage arrest